ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு (Child sexual abuse) எதிராக, சிறிய தேவதைக்கு ஓர் வார்த்தை (A word for the little angel) எனப் பொருள்படும் ”பரீ பெயின் கதா தியே” (Paree Pain Katha Tiye) எனும் மாநிலம் தழுவிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை ஒடிஸா மாநிலத்தில் துவக்கி வைத்துள்ளார்.
குழந்தை பாலியல் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதில் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் செயற்பாத்திரம் மற்றும் முக்கியத்துவம் மீதும், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தெரிவிப்பதன் தேவை மற்றும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டு அதிர்ச்சிக்குள்ளான குழந்தைகளுக்கான சிகிச்சை மீதும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒடிஸா அரசின் இப்பிரச்சாரத்துடன் யுனிசெப் (UNICEF) மற்றும் ஒடிஸா மாநில காவல் துறை கைகோர்த்துள்ளது.
இதற்காக “பரி எக்ஸ்பிரஸ்” (Paree Express) எனும் மாற்றம் செய்யப்பட்ட 15 வேன்களை நவீன் பட்நாயக் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்பிரச்சாரத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police) மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமைத் தாங்குவர்.