மகாராஷ்ட்ரா அரசு விவசாயிகளுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக பருத்தி திட்டத்தினை (Cotton Mission) தொடங்கியுள்ளது. இந்தப் பணி இந்திய பல்பொருள் பரிமாற்று வர்த்தகத்துடன் (MCX-Multi Commodity Exchange) மகாராஷ்டிரா அரசின் புரிந்துணர்வு கையெழுத்தானதின் மூலம் தொடங்கப்பட்டது.
மாநிலத்தின் விதர்பா பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கும் இறுதிச் சந்தைக்குமிடையேயான சங்கிலித் தொடர்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்தப் பணி விவசாயிகளுக்கு விலை கண்டறிதல் நுட்பத்தில் பங்கேற்றல் மற்றும் அவர்களது உற்பத்திப் பொருட்களை தேசிய சந்தையில் மேம்பட்ட விலையில் விற்பனை செய்வதற்கான புரிதலை ஏற்படுத்தித் தரும்.