TNPSC Thervupettagam

பருப்பொருளின் 5ம் நிலை

June 19 , 2020 1624 days 2494 0
  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள நாசா ஆராய்ச்சியாளர்கள் போஸ்-ஐன்ஸ்டீன் சுருங்கு பொருள் ஆய்வின் முதலாவது முடிவுகளை வெளியிட்டு உள்ளனர்.
  • துகள்கள் புவியியல் கட்டுப்பாடுகளிலிருந்து கட்டுப்பாடற்ற நிலையைக் கொண்டிருக்கும் என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது.
  • போஸ்-ஐன்ஸ்டீன் சுருங்கு பொருளானது (BEC - Bose-Einstein Condensates) ஏறக்குறைய கடந்த ஒரு நூற்றாண்டிற்கு முன்பாக இந்தியக் கணிதவியலாளரான சத்யேந்திர நாத் போஸ் மற்றும் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரால் கணிக்கப் பட்டுள்ளது. 
  • BEC என்பது போசான் வாயுக்கள் துல்லியமாக சுழியத்திற்கு அருகிலான ஒரு வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படும் போது உருவாகும் பருப்பொருளின் ஒரு நிலை ஆகும்.
  • திண்மம், திரவம், வாயு மற்றும் பிளாஸ்மா என்று  பருப்பொருள் நிலைகள் 4 ஆக உள்ளன.
  • BEC ஆனது 5வது பருப்பொருள் நிலையாகும். இது 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பிளாஸ்மா என்று அழைக்கப்படும் 4வது பருப்பொருள் நிலையானது வேதியியல் அறிஞர் இர்விங் லாங்முய்ர் என்பவரால் விவரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்