சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள நாசா ஆராய்ச்சியாளர்கள் போஸ்-ஐன்ஸ்டீன் சுருங்கு பொருள் ஆய்வின் முதலாவது முடிவுகளை வெளியிட்டு உள்ளனர்.
துகள்கள் புவியியல் கட்டுப்பாடுகளிலிருந்து கட்டுப்பாடற்ற நிலையைக் கொண்டிருக்கும் என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது.
போஸ்-ஐன்ஸ்டீன் சுருங்கு பொருளானது (BEC - Bose-Einstein Condensates) ஏறக்குறைய கடந்த ஒரு நூற்றாண்டிற்கு முன்பாக இந்தியக் கணிதவியலாளரான சத்யேந்திர நாத் போஸ் மற்றும் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரால் கணிக்கப் பட்டுள்ளது.
BEC என்பது போசான் வாயுக்கள் துல்லியமாக சுழியத்திற்கு அருகிலான ஒரு வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படும் போது உருவாகும் பருப்பொருளின் ஒரு நிலை ஆகும்.
திண்மம், திரவம், வாயு மற்றும் பிளாஸ்மா என்று பருப்பொருள் நிலைகள் 4 ஆக உள்ளன.
BEC ஆனது 5வது பருப்பொருள் நிலையாகும். இது 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்மா என்று அழைக்கப்படும் 4வது பருப்பொருள் நிலையானது வேதியியல் அறிஞர் இர்விங் லாங்முய்ர் என்பவரால் விவரிக்கப்பட்டுள்ளது.