இந்தியா தனது பருவநிலை இடர் குறியீட்டு (CRI) தரவரிசையை 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளால் உலகளவில் ஏழாவது மோசமாக பாதிக்கப் பட்ட நாடு என்ற நிலையிலிருந்து, 2022 ஆம் ஆண்டில் 49வது இடத்திற்கு மேம்படுத்தி உள்ளது.
இருப்பினும், பல ஆண்டுகளாக மிகவும் நீண்ட கால (1993-2022) மதிப்பீட்டில் ஆறாவது மோசமான நாடாக இந்தியா கருதப்படுவதன் மூலம் மிகவும் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகள் சுற்றுச்சூழல் சிந்தனைக் குழுவான ஜெர்மன் வாட்ச் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டு CRI அறிக்கையின் ஒரு பகுதியாகும்.
30 ஆண்டுகளில் (1993-2022) பதிவான சுமார் 400 தீவிர வானிலை நிகழ்வுகளில் 80,000 உயிரிழப்பு மற்றும் சுமார் 180 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.
உலகளவில், 2022 ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டு காலக் கட்டத்தில் ஏற்பட்ட 9,400க்கும் மேற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளால் 7,65,000க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.
இது மொத்தம் 4.2 டிரில்லியன் டாலர் (பணவீக்கத்திற்கு ஏற்ப ஈடு செய்யப் பட்டது) பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தியது.
1993-2022 ஆகிய காலக் கட்டத்தில் ஏற்பட்டப் புயல்கள் (35%), வெப்ப அலைகள் (30%) மற்றும் வெள்ளம் (27%) ஆகியவை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தின.
இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகியவை கடந்த 30 ஆண்டுகளாக உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட சுமார் 10 நாடுகளில் இடம் பெற்ற மூன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாகும்.
1993-2022 ஆம் ஆண்டு பட்டியலில் டொமினிகா, சீனா, ஹோண்டுராஸ், மியான்மர் மற்றும் இத்தாலி ஆகியவை மிகவும் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் ஐந்து இடங்களில் உள்ள நாடுகள் ஆகும்.
இந்தியா 1993, 1998 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பேரழிவுகரமான வெள்ளத்தையும், 2002, 2003 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கடுமையான வெப்ப அலைகளையும் எதிர் கொண்டது.