பருவநிலை உயர்லட்சிய உச்சி மாநாடு (CAS) ஆனது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஒரு பகுதியாக நியூயார்க் நகரில் நடைபெற்றது.
இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு 34 அரசுகள் மற்றும் 7 நிறுவனங்களின் பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர்.
சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
உலகளாவியப் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் இவை கூட்டாக 42% பங்கைக் கொண்டுள்ளதோடு, மேலும் அவை பசுமை இல்ல வாயு உமிழ்வில் முதல் மூன்று இடங்களில் உள்ள நாடுகளாகும்.
இந்தியா, உமிழ்வுச் செறிவினை 2030 ஆம் ஆண்டில் 2005 ஆம் ஆண்டின் போது இருந்த அளவிலிருந்து 45% ஆக குறைப்பதாக (2015 ஆம் ஆண்டில் தான் ஒப்புக் கொண்டதை விட 10% அதிகமாக) 2022 ஆம் ஆண்டில் தனது பருவநிலை உறுதிப்பாடுகளைப் புதுப்பித்தது.
நேபாளம் மற்றும் போர்ச்சுகல் ஆகியவை முன்னதாக அறிவிக்கப்பட்ட இலக்கான 2050 ஆம் ஆண்டிற்குப் பதிலாக 2045 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வு நிலையை அடைவதற்கான தனது திருத்தப்பட்ட இலக்கினைத் தற்போது அறிவித்தன.