2024 ஆம் ஆண்டானது 175 ஆண்டு காலக் கண்காணிப்பு பதிவில் மிகவும் வெப்பமான ஆண்டாகப் பதிவாகியுள்ளது.
தொழில்துறைக்கு முந்தைய சகாப்தத்தை விட 1.5°C க்கும் அதிகமாக இருந்த முதல் ஆண்டாக இது இருக்கலாம்.
உலகளாவிய சராசரி மேற்பரப்பு வெப்பநிலையானது 1850-1900 ஆம் காலக் கட்டத்தில் பதிவான சராசரியை விட 1.55 ± 0.13°C அதிகமாக உள்ளது.
1960 ஆம் ஆண்டு முதல் வெப்பமயமாதல் விகிதங்கள் இரட்டிப்பாகியுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில், கடந்த 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடல் வெப்பம் அதிகமாக இருந்தது.
1993 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பதிவான 2.1 மில்லிமீட்டர் என்ற வருடாந்திர அதிகரிப்பு ஆனது 2015 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 4.7 மில்லிமீட்டர் அதிகரிப்பினை விட குறைவாகும்.
2024 ஆம் ஆண்டில் வெப்பமண்டலப் புயல்கள், வெள்ளம், வறட்சி மற்றும் இன்ன பிற ஆபத்துகள் காரணமாக 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்தனர்.
2024 ஆம் ஆண்டில் சுமார் 36 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எட்டு நாடுகளில், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைந்தது ஒரு மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையை எதிர்கொண்டனர்.
2023 ஆம் ஆண்டில், வளிமண்டல CO₂ வாயு அளவானது தொழில்துறைக்கு முந்தைய நிலைகளில் 151% அளவினை எட்டியது என்பதோடு இது 800,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக அதிகமாகும்.