TNPSC Thervupettagam

பருவநிலை குறித்த அறிக்கை 2024

March 25 , 2025 6 days 59 0
  • 2024 ஆம் ஆண்டானது 175 ஆண்டு காலக் கண்காணிப்பு பதிவில் மிகவும் வெப்பமான ஆண்டாகப் பதிவாகியுள்ளது.
  • தொழில்துறைக்கு முந்தைய சகாப்தத்தை விட 1.5°C க்கும் அதிகமாக இருந்த முதல் ஆண்டாக இது இருக்கலாம்.
  • உலகளாவிய சராசரி மேற்பரப்பு வெப்பநிலையானது 1850-1900 ஆம் காலக் கட்டத்தில் பதிவான சராசரியை விட 1.55 ± 0.13°C அதிகமாக உள்ளது.
  • 1960 ஆம் ஆண்டு முதல் வெப்பமயமாதல் விகிதங்கள் இரட்டிப்பாகியுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில், கடந்த 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடல் வெப்பம் அதிகமாக இருந்தது.
  • 1993 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பதிவான 2.1 மில்லிமீட்டர் என்ற வருடாந்திர அதிகரிப்பு ஆனது 2015 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 4.7 மில்லிமீட்டர் அதிகரிப்பினை விட குறைவாகும்.
  • 2024 ஆம் ஆண்டில் வெப்பமண்டலப் புயல்கள், வெள்ளம், வறட்சி மற்றும் இன்ன பிற ஆபத்துகள் காரணமாக 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்தனர்.
  • 2024 ஆம் ஆண்டில் சுமார் 36 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • எட்டு நாடுகளில், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைந்தது ஒரு மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையை எதிர்கொண்டனர்.
  • 2023 ஆம் ஆண்டில், வளிமண்டல CO வாயு அளவானது தொழில்துறைக்கு முந்தைய நிலைகளில் 151% அளவினை எட்டியது என்பதோடு இது 800,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்