பருவநிலை தொடர் விளைவு: தொலைத்தொடர்புகளை ஆய்வு செய்தல்
December 22 , 2023 339 days 250 0
பருவநிலை தொலைத்தொடர்புகள் என்றும் அழைக்கப்படும் பூமியில் உள்ள பிரிந்து காணப்படும் இடங்களில் நிகழும் வானிலை நிகழ்வுகளுக்கு இடையிலான தொடர்புகள் உலகளவில் பெரியளவில் வலுவடைந்து வருகின்றன.
இந்தத் தொலைத்தொடர்புகள் கடந்த 37 ஆண்டுகளில் தெற்கு அரைக்கோளத்தை அதிக அளவில் பாதித்துள்ளன.
உலகின் ஒரு பகுதியில் ஏற்படும் காட்டுத் தீ மற்றும் வெள்ளம் போன்ற பருவநிலை நிகழ்வுகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் உள்ள வானிலையை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை தொலைத்தொடர்புகள் விவரிக்கச் செய்கின்றன.
தொலைத்தொடர்புகளால் மிகவும் வெகுவாக பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் தென் கிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை ஆகும்.
தெற்கு அரைக்கோளத்தில் பெருமளவில் பெருங்கடல்கள் பரவியிருப்பதால் இது அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக உள்ளது.
இது மிகவும் நிலையான தொலைதொடர்புகள் மற்றும் ராஸ்பி அலை அல்லது கிரக அலைகளின் உருவாக்கத்திற்கு பங்களிக்கிறது.
பெருங்கடல்களிலும் வளிமண்டலத்திலும் ராஸ்பி அலைகள் ஏற்படுகின்றன.
அவை பூமியின் சுழற்சியின் காரணமாக இயற்கையாகவே நிகழ்கின்றன என்பதோடு, இவை வெப்ப மண்டலத்திலிருந்துத் துருவ மண்டலங்களை நோக்கி வெப்பத்தையும், வெப்ப மண்டலங்களை நோக்கி குளிர்ந்தக் காற்றையும் இடமாற்ற உதவுகின்றன.