TNPSC Thervupettagam

பருவநிலை நிதி வழங்கல் இலக்கு

October 17 , 2021 1009 days 477 0
  • ஆசிய மேம்பாட்டு வங்கியானது 2019-2030 ஆகிய காலகட்டத்தில் தனது வளர்ந்து வரும் உறுப்பினர் நாடுகளுக்கும் வழங்கும் பருவநிலை நிதி வழங்கல் இலக்கினை 20 பில்லியன் டாலர் உயர்த்தி 100 பில்லியன் டாலராக அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
  • முன்பாக 2018 ஆம் ஆண்டில் ஆசியாவின் வளர்ந்து வரும் நாடுகளுக்கு 2019-30 காலகட்டத்திற்கான பருவநிலை நிதி வழங்கலுக்காக 80 பில்லியன் டாலர் என்ற இலக்கினை ஆசிய மேம்பாட்டு வங்கி அறிவித்தது.
  • 20 பில்லியன் டாலர் கூடுதல் நிதி உதவியானது குறைந்த கார்பன் ஆற்றல் வளங்கள், பருவநிலை ஏற்புத் திட்டங்கள் மற்றும் தனியார் துறை திட்டங்கள் போன்ற பருவநிலை தணிப்பு முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்