இந்த அறிக்கையினை உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே 2023 ஆம் ஆண்டில், செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள், 1.5 °Cக்கும் அதிகமான உலச்க சராசரி வெப்பநிலையுடன் கூடிய 38 நாட்கள் பதிவாகியுள்ளது.
இது மற்ற பிற ஆண்டையும் விட அதிகமாக உள்ளதோடு இதன் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும்.
செயற்கைக் கோள் தரவுகள் பெறப்பட்டதற்குப் பிறகு அண்டார்டிக் கடல் பனிப் பரவல் ஆனது 1991-2023 ஆம் ஆண்டுகாலச் சராசரியை விட 2.67 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் குறைவாக, அதன் மிகக் குறைந்த தினசரி ஒப்பீட்டு அளவை எட்டியது.