TNPSC Thervupettagam

பருவநிலை நெகிழ்திறன் நிதி - UNHCR

May 2 , 2024 206 days 248 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையான ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) ஆனது, UNHCR பருவநிலை நெகிழ்திறன் நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பருவநிலை மாற்றத்தினால் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த சமூகங்களின் பாதுகாப்பை அதிகரிப்பதை இது பெரும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நிதியம் ஆனது முதன்முறையாக, பருவநிலை தொடர்பான அதிர்ச்சிகளுக்குத் தயார் படுத்தவும், அதனை எதிர்கொள்ளவும், அதிலிருந்து மீண்டு வரவும் அவர்களுக்கு ஆற்றலை வழங்கும் வகையிலும் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் புலம் பெயர்ந்தச் சமூகங்களைப் பாதுகாப்பதற்குமான பல்வேறு நிதி சார் முயற்சிகளை மேற்கொள்வதை பிரத்தியேக இலக்காகக் கொண்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், 70 சதவீதத்திற்கும் அதிகமான அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பருவநிலையால் மிக அதிகம் பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் இருந்து வெளியேறினர்.
  • உலகளவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள 114 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதுகாப்பதற்காக UNHCR செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்