மகாராஷ்டிரா மாநிலத்தின் மராத்வாடா மற்றும் விதர்பா பகுதியைச் சேர்ந்த குறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு பருவநிலை நெகிழ்திறன் வேளாண்மைக்காக (Climate Resilient Agriculture ) உலக வங்கியுடன் 420 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தை உலக வங்கியுடன் மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா அரசு கையெழுத்திட்டுள்ளது.
உலக வங்கியின் மேம்பாடு மற்றும் மறுகட்டமைப்பிற்கான சர்வதேச வங்கி இந்த கடனை வழங்க உள்ளது. இந்த கடன் ஒப்பந்தமானது 24 ஆண்டுகள் முதிர்ச்சி (Maturity Period) காலத்தைக் கொண்டது. 6 வருடங்கள் கருணைக் காலத்தைக் (Grace Period) கொண்டது.
உயர் நீர்பிடிப்பு பகுதிகளில் (upper catchment areas) மரம் நடுதல் மற்றும் காடுகள் வளர்ப்பு ஆகியவற்றை ஈடுபடுத்தி கார்பன் உட்கிரகிப்பின் (Carbon sequestration) மூலம் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை தணிக்க இத்திட்டம் உதவும்.