TNPSC Thervupettagam

பருவநிலை நெகிழ்திறன் வேளாண்மை

April 23 , 2018 2440 days 815 0
  • மகாராஷ்டிரா மாநிலத்தின் மராத்வாடா மற்றும் விதர்பா பகுதியைச்  சேர்ந்த குறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு    பருவநிலை நெகிழ்திறன் வேளாண்மைக்காக (Climate Resilient Agriculture )  உலக வங்கியுடன் 420 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான  கடன் ஒப்பந்தத்தை உலக வங்கியுடன் மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா அரசு கையெழுத்திட்டுள்ளது.
  • உலக வங்கியின் மேம்பாடு மற்றும் மறுகட்டமைப்பிற்கான சர்வதேச வங்கி  இந்த கடனை வழங்க உள்ளது. இந்த கடன் ஒப்பந்தமானது 24  ஆண்டுகள் முதிர்ச்சி (Maturity Period) காலத்தைக் கொண்டது. 6 வருடங்கள் கருணைக் காலத்தைக் (Grace Period) கொண்டது.
  • உயர் நீர்பிடிப்பு பகுதிகளில் (upper catchment areas) மரம் நடுதல் மற்றும் காடுகள் வளர்ப்பு ஆகியவற்றை ஈடுபடுத்தி கார்பன் உட்கிரகிப்பின் (Carbon sequestration)  மூலம் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை தணிக்க இத்திட்டம் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்