TNPSC Thervupettagam

பருவநிலை நெருக்கடி: சமத்துவமின்மை மிகுந்த பகுதி குறித்த ஆய்வு

January 5 , 2024 324 days 298 0
  • இது வேளாண் துறைகளில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பருவநிலை மாற்ற அச்சுறுத்தலின் அளவை அடிப்படையாகக் கொண்டு 87 நாடுகளை வரிசைப் படுத்தி உள்ளது.
  • ஆறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த இடர் குறியீட்டில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது.
  • மற்ற ஆசிய நாடுகளில் வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகியவை முறையே இரண்டாவது, நான்காவது, ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பிடித்தன.
  • வேளாண் உணவு உற்பத்தி முறைகள் ஆனது உற்பத்தி, அறுவடைக்குப் பிந்தைய கையாளுதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • ஆப்பிரிக்க மற்றும் ஆசியப் பிராந்தியங்களுக்குள், மத்திய, கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு மற்றும் தெற்காசியா முக்கியமாக ஆபத்தில் உள்ளன.
  • வறட்சி, வெள்ளம் அல்லது குறுகிய பயிர் வளரும் பருவம் போன்ற மிக மோசமான பருவ நிலை அபாயங்களை அந்நாடுகள் எதிர்கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்