TNPSC Thervupettagam

பருவநிலை மாற்ற நெகிழ் திறனில் துத்தநாகத்தின் பங்கு

July 13 , 2024 5 days 57 0
  • பயறு வகை பயிர்களின் ஆரோக்கியத்தில் துத்தநாகம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை பிரான்சில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • வளிமண்டல நைட்ரஜன் ஆனது தாவரங்களுக்கு ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாக விளங்கும் அம்மோனியாவாக மாற்றப்படும் ஒரு செயல்முறையான தாவரத்தின் நைட்ரஜன் நிலைநிறுத்தலில் துத்தநாகம் உதவுகிறது.
  • வேர் முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்தும் ஒரு பாக்டீரியமான ரைசோபியாவுடன் பயறு வகை பயிர்கள் ஒரு கூட்டு வாழ்க்கைத் தொடர்பினை நன்கு உருவாக்குகின்றன.
  • இந்த வேர் முடிச்சுகள் வெப்பநிலை, வறட்சி, வெள்ளம், மண்ணின் உப்புத்தன்மை மற்றும் மண்ணில் அதிக நைட்ரஜன் அளவுகள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளுக்கு அதிக உணர்திறன் கொண்டவையாகும்.
  • பயிறு வகைகள் பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளை ஒருங்கிணைக்கவும் நைட்ரஜன் நிலைப்படுத்தும் திறனைக் கட்டுப்படுத்தவும் ஒரு இரண்டாம் நிலை சமிக்ஞையாக துத்தநாகத்தைப் பயன்படுத்துகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • நைட்ரேட் நிலைநிறுத்தம் (FUN) எனப்படும் படியெடுத்தல் கட்டுப்பாட்டக அமைப்பு காரணமாக இந்தச் செயல்முறை செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்