பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீடு (CCPI 2025) அறிக்கையானது, அசர்பைஜான் நாட்டில் பாகுவில் நடைபெற்ற வருடாந்திர ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாநாட்டில் வெளியிடப்பட்டது.
பருவநிலை மாற்றத்தினை எதிர்த்துப் போராடுவதற்கான பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட 60 நாடுகளின் பட்டியலில் இந்தியா 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
இப் பட்டியலின் முதல் மூன்று இடங்கள் காலியாக விடப்பட்டுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து டென்மார்க் (நான்காவது இடம்) மற்றும் நெதர்லாந்து (ஐந்தாவது இடம்) ஆகியன இடம் பெற்றுள்ளன.
மிகப்பெரிய அளவில் உமிழ்வினை வெளியிடும் இரண்டு நாடுகள் ஆன சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை முறையே மிக குறைவான செயல் திறனுடன் 55 மற்றும் 57வது இடங்களில் உள்ளன.
இந்தியாவின் தனிநபர் உமிழ்வுகள் ஆனது கார்பன் டை ஆக்சைடுக்கு சமமான (tCO2e) 2.9 டன் ஆக உள்ளதோடு இது உலகச் சராசரியான சுமார் 6.6 tCO2e அளவை விட மிகக் குறைவாக உள்ளது.
CCPI குறியீட்டில், இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை மட்டுமே மிக அதிகச் செயல்திறன் கொண்ட இரண்டு G20 நாடுகளாகும்.
CCPI குறியீட்டில் குறைந்தத் தரவரிசையில் உள்ள நான்கு நாடுகள் ஈரான் (67வது), சவுதி அரேபியா (66வது), ஐக்கிய அரபு அமீரகம் (65வது), மற்றும் ரஷ்யா (64வது) ஆகியன ஆகும்.