TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றத்திற்கான மையம்

July 25 , 2018 2186 days 719 0
  • உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கியானது (NABARD - National Bank for Agriculture and Development) பருவ நிலை மாற்றத்திற்கான மையத்தைத் தொடங்கியுள்ளது.
  • தென் கிழக்கு ஆசியாவில் பருவநிலை மாற்றத்திற்காக தொடங்கப்பட்ட முதல் மையம் இந்த மையம் ஆகும்.
  • அரசாங்கம், தனியார், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா துறைகள் போன்ற பல்வேறு பங்குதாரர்கள் பருவநிலை மாற்றத்திற்காக எடுக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது இதன் குறிக்கோளாகும்.
  • நபார்டு வங்கியானது பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு பங்குதாரர்களுக்கு திறன் கட்டமைப்புகளை வழங்குகிறது.
  • நபார்டு வங்கி மூன்று முக்கிய பருவநிலை நிதிக்கான தேசிய நடைமுறைப்படுத்துதல் நிறுவனமாக செயல்படுகிறது. அவையாவன பசுமை பருவநிலைக்கான நிதி (GCF – Green Climate Fund), UNFCCC-ன் தத்தெடுப்புக்கான நிதி மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான தேசியத் தத்தெடுப்பு நிதி (NAFCC - National Adaptation fund for Climate Change).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்