உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கியானது (NABARD - National Bank for Agriculture and Development) பருவ நிலை மாற்றத்திற்கான மையத்தைத் தொடங்கியுள்ளது.
தென் கிழக்கு ஆசியாவில் பருவநிலை மாற்றத்திற்காக தொடங்கப்பட்ட முதல் மையம் இந்த மையம் ஆகும்.
அரசாங்கம், தனியார், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா துறைகள் போன்ற பல்வேறு பங்குதாரர்கள் பருவநிலை மாற்றத்திற்காக எடுக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது இதன் குறிக்கோளாகும்.
நபார்டு வங்கியானது பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு பங்குதாரர்களுக்கு திறன் கட்டமைப்புகளை வழங்குகிறது.
நபார்டு வங்கி மூன்று முக்கிய பருவநிலை நிதிக்கான தேசிய நடைமுறைப்படுத்துதல் நிறுவனமாக செயல்படுகிறது. அவையாவன பசுமை பருவநிலைக்கான நிதி (GCF – Green Climate Fund), UNFCCC-ன் தத்தெடுப்புக்கான நிதி மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான தேசியத் தத்தெடுப்பு நிதி (NAFCC - National Adaptation fund for Climate Change).