TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றத்தை ஆய்வு செய்வதற்கான முதலாவது பிரான்ஸ்-சீனா செயற்கைக்கோள்

October 31 , 2018 2089 days 643 0
  • கடற்பரப்பின் மேற்பரப்பில் வீசும் காற்றையும், அலைகளையும் ஆய்வு செய்வதற்காக முதலாவது பிரான்ஸ்-சீனா செயற்கைக் கோள் விண்வெளி சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது.
  • இது சீனாவின் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து Long March 2C என்ற ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
  • இது சூறாவளிகளை முன்கூட்டியே கணிப்பதற்கும், பருவநிலை மாற்றம் பற்றியும், பெருங்கடல் மற்றும் வளிமண்டலத்திற்கிடையே ஏற்படும் உள்ளிணைப்புகள் பற்றியும் விஞ்ஞானிகளின் புரிதலை மேம்படுத்துவதற்கும் உதவும்.
  • சீனா மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றால் இணைந்து அனுப்பப்படும் முதல் செயற்கைக் கோள் இதுவாகும்.
  • இந்த செயற்கைக் கோள் 2 ரேடார்களோடு பொருத்தப்பட்டுள்ளது.
    • பிரான்சால் தயாரிக்கப்பட்ட ஸ்விம் (SWIM) - அலைகளின் நீளம் மற்றும் திசையை அளப்பதற்கு உதவும்.
    • சீனாவின் SCAT - அலைகளின் வலிமை மற்றும் திசையை ஆய்விடுவதற்கு உதவும்.
  • தகவல்கள் சீனா மற்றும் பிரான்ஸ் இரு நாடுகளாலும் இணைந்து சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்