TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றம் 2021 : இயற்பியல் அறிவியல் அறிக்கை

September 27 , 2021 1029 days 506 0
  • பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையிலான குழுவானது சமீபத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையானது  தெளிவான பருவநிலை நடவடிக்கைகளை கோருகிறது.
  • இது பின்வரும் காட்சிகளை விளக்குகிறது.
    • குறைவான மற்றும் மிகக்குறைவான பசுங்குடில் வாயு உமிழ்வு – இங்கு  உமிழ்வுகள், நூற்றாண்டின் மையப் பகுதியில் நிகரச் சுழியமாக குறையும். பின்னர் அதற்கு அப்பால் அது நிகர எதிர்மறையாக இருக்கும்.
    • இடைநிலை பசுங்குடில் வாயு உமிழ்வு – இந்த உமிழ்வானது 2100 ஆம் ஆண்டில் தற்போதைய அளவை விட இரட்டிப்பாகும்.
    • அதிக மற்றும் மிக அதிக பசுங்குடில் வாயு உமிழ்வு – இந்த உமிழ்வானது 2050 ஆம் ஆண்டில் தற்போதைய அளவை விட இரட்டிப்பாகும்.
    • சராசரி உலக வெப்பநிலையானது தொழில்துறைக் காலத்திற்கு முன்பை விட தற்போது 1.09°C அதிகமாக உள்ளது.
    • 1850 ஆம் ஆண்டில் 285 PPM ஆக இருந்த வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு செறிவானது தற்போது 410 PPM ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்