TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றம் 2021 அறிக்கை

August 14 , 2021 1073 days 551 0
  • ஐக்கிய நாடுகள் அவையின் பருவநிலை தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவானது சமீபத்தில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையானது, உலகளாவிய பருவநிலை மாற்றம் மற்றும் உலகச் சமுதாயங்கள் மீது அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த ஒரு எச்சரிக்கையை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது.
  • ‘பருநிலை மாற்றம் 2021 : இயற்பியல் அறிவியல் அடிப்படை’ எனப்படும் இந்த அறிக்கையானது 1988 ஆம் ஆண்டில் பருவநிலை தொடர்பாக அரசுகளுக்கு இடையேயான குழு தொடங்கப் பட்டதிலிருந்து, இந்த அமைப்பினால் வெளியிடப் பட்டுள்ள 6வது மதிப்பீட்டு அறிக்கையாகும்.
  • உலகளாவிய வெப்பநிலையானது தொழில்துறைக் காலத்திற்கு முந்தைய நிலையிலிருந்து வெறும் 20 ஆண்டுகளுக்குள் 1.5-2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்ற திடுக்கிடும் தகவலானது இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது பருவநிலை மாற்றத்தின் பிராந்திய அளவிலான விளைவுகளைக் கணிப்பதற்கான IPCC குழுவின் முதல் அறிக்கையாகும்.
  • தீவிரமான வெப்ப அலைகள்என்பவை இந்தியாவிற்கான முதல் சவாலாக இருக்கும்.
  • தீவிர மழைப் பொழிவினால் ஏற்படும் வெள்ளப் பெருக்கம் தெற்காசியா மற்றும் இந்தியா ஆகிய பகுதிகள் முழுவதும் அதிகரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்