TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. அறிக்கை

March 3 , 2022 872 days 681 0
  • ஐக்கிய நாடுகளின் பருவநிலை அறிவியல் குழுமமானது பருவநிலை மாற்றம் நமக்கு அப்பாற்பட்டதாக உள்ளதாகவும் மனிதச் சமூகம் அதற்குத் தயார் நிலையில் இல்லை என்றும் தனது முக்கிய அறிக்கையில் எச்சரித்தது.
  • உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பருவநிலையின் தாக்கத்தின் ஏற்கனவே அபாயகரமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறி ஒரு மாபெரும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இந்த அறிக்கை அழைப்பு விடுத்தது.
  • 2040 ஆம் ஆண்டுக்குள், இந்தப் பருவநிலை மாற்றமானது உலகைப் பசி நிறைந்த ஒன்றாகவும், நோய்கள் மிக்கதாகவும், மிக அபாயகரமான ஒன்றாகவும், இடர்களை அதிகரித்து மிகுந்த ஏழ்மை மிக்கதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • மேலும், மனிதனால் ஏற்படும் புவி வெப்பமயமாதல் நிகழ்வு மட்டுப்படுத்தப் படா விட்டால், பூமியானது 127 வழிகளில் சிதைந்து விடும்.   
  • தற்போது இது கொடிய தீ விபத்துகள், வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளங்கள் போன்ற சில முக்கிய மீள முடியாத நிகழ்வுகளால் வழக்கமாக ஒரு தொடர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்