உலகின் மிகக் குறைவான வளர்ச்சியடைந்த 46 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் (LDC) பருவநிலை மாற்றம் குறித்த கூட்டு டக்கார் பிரகடனத்தினை (2023) வெளியிட்டு உள்ளனர்.
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு உடன்படிக்கையின் 28வது பங்குதாரர்கள் மாநாட்டிற்கான (COP28) அந்நாடுகளின் எதிர்பார்ப்பு மற்றும் முன்னுரிமைகளை இது குறிப்பிட்டுக் காட்டுகிறது.
டக்கார் பிரகடனம் அவசர உலகளாவிய உமிழ்வு குறைப்பு, புதிய இழப்பு மற்றும் சேத நிதி மற்றும் உலக பருவநிலை நடவடிக்கைகளில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு உயர் இலட்சிய உலகளாவிய பங்கான பருவநிலை நிதியின் வரம்பு உயர்வினை செயல்படுத்துவதற்கான அழைப்பினை விடுத்தது.
28வது பங்குதாரர்கள் மாநாடானது 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 12 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற உள்ளது.
உலக மக்கள்தொகையில் 14 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினைக் கொண்டுள்ள குறைவான வளர்ச்சியடைந்த நாடுகள், புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் தொழில் துறை செயல்முறைகளில் இருந்து வெளியேற்றப்படும் உமிழ்வுகளில் 1 சதவிகிதப் பங்கினை மட்டுமே கொண்டுள்ளது.