TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றம் குறித்த மாநில செயல் திட்டம் 2025

February 10 , 2025 12 days 123 0
  • தமிழ்நாடு அரசானது, அதன் பருவநிலை மாற்றம் குறித்த மாநில செயல் திட்டத்தினை (SAPCC) இறுதி செய்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஒப்புதலுக்காக வேண்டி சமர்ப்பித்துள்ளது.
  • பருவநிலை மாற்றத்திற்கான ஒரு பிரத்தியேக திட்டத்தினைத் தொடங்கி அதற்கு நிதி ஒதுக்கீட்டைச் செய்த முதல் இந்திய மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • SAPCC என்பது பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் முக்கியத் துறைகளுக்கு வெவ்வேறு தணிப்பு மற்றும் தகவமைப்பு உத்திகளை வகுக்கும் ஒரு முக்கிய ஆவணம் ஆகும்.
  • இது வேளாண்மை, நீர்வளம், கடலோரப் பகுதி மேலாண்மை, காடு மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
  • தமிழ்நாடு மாநிலமானது, இந்தியாவின் நிலப்பரப்பில் 4% பங்கினை கொண்டுள்ளது என்பதோடு இந்தியாவின் மக்கள்தொகையில் 6% பேர் தமிழகத்தில் வசிக்கின்றனர், ஆனால் இம்மாநிலம் இந்தியாவின் நீர் வளங்களில் 2.5% பங்கினை மட்டுமே கொண்டு உள்ளது.
  • மேற்பரப்பு நீர் வளங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை மற்றும் நிலத்தடி நீரில் 80% ஆனது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு விட்டன.
  • தேசியச் சராசரியான 2,200 மீ3 என்ற அளவுடன் உடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் உள்ள நீர்வளங்களின் தனிநபர் கிடைக்கும் தன்மை 900 மீ3 மட்டுமேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்