பருவநிலை மாற்றம் தொடர்பான முதல் சட்டம் – தென்னாப்பிரிக்கா
August 1 , 2024 114 days 150 0
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் இராமபோசா மிகப்பெரியப் பருவநிலை மாற்றச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இது பெரிய அளவில் உமிழ்வினை வெளியிடும் அமைப்புகளுக்கு வரம்புகளை நிர்ணயிக்கும் என்பதோடு ஒவ்வொரு சிறுநகரமும் பெருநகரமும் ஒரு மாற்றுத் தொழில் நுட்ப ஏற்புத் திட்டத்தினை வெளியிட வேண்டும் என்றும் நிர்ணயிக்க உள்ளது.
தென்னாப்பிரிக்கா நாடானது, பாரிசு பருவநிலை ஒப்பந்தத்தின் கீழான அதன் உமிழ்வு குறைப்பு உறுதிப்பாடுகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவானது உலகின் மிக அதிக கார்பன் உமிழ்வு மிகுந்த நாடாகவும், அதிகளவுப் பசுமை இல்ல வாயுக்களை உமிழும் முதல் 15 நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.