தெற்காசியாவில் ஏறக்குறைய 350 மில்லியன் குழந்தைகள் “அதிகபட்ச அல்லது மிக அதிகபட்ச தண்ணீர்ப் பற்றாக்குறை நிலையுடன்” போராடி வருகின்றனர்.
இது உலகின் அனைத்துப் பகுதிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையாகும்.
மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறையானது பருவநிலை மாற்றத்தின் பல்வேறு தாக்கங்களினால் மேலும் மோசமடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், மாலத்தீவுகள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய எட்டு நாடுகள் அடங்கியப் பிராந்தியத்தில் உலகின் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமான குழந்தைகள் காணப்படுகின்றனர்.
ஆனால் இந்தப் பிராந்தியம் ஆனது, உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க நீர் வளத்தில் நான்கு சதவீதத்தினை மட்டுமே கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு, தெற்காசியாவில் 45 மில்லியன் குழந்தைகளுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் கிடைக்கப்பெறவில்லை.
தெற்காசியாவைத் தொடர்ந்து கிழக்கு & தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு & மத்திய ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் முறையே 130 மில்லியன் மற்றும் 102 மில்லியன் குழந்தைகள் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர்.