பருவநிலை மாற்றம் மீதான சர்வதேச மாநாடு நேபாளத்தில் அண்மையில் நடைபெற்றது.
நான்கு நாள் நடைபெற்ற இம்மாநாட்டில் பருவநிலை மாநாடு மற்றும் உலக வெப்ப மயமாதலினால் இந்துகுஷ் மலைத்தொடர்களில் உண்டாகும் பாதக விளைவுகள் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது.
நேபாளத்தின் முதல் பெண் அதிபர் மற்றும் தற்போதைய இரண்டாவது நேபாள அதிபரான பித்யா பண்டாரி இம்மாநாட்டை தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த மலைகள் மேம்பாட்டிற்கான சர்வதேச மையத்தினோடு [International Centre for Integrated Mountain Development] சேர்ந்து நேபாளத்தின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இம்மாநாட்டை நடத்தியுள்ளது.
ஆப்கான் தொடங்கி மியான்மர் வரை அமைந்துள்ள மலைத்தொடரே இந்துகுஷ் இமயத் தொடராகும்.
ஆசியாவின் 10 முக்கிய நிதி அமைப்புகளின் ஆதாரமாகவும், 210 மில்லியன் மக்களுக்கு சுற்றுச்சூழல் சேவை, தண்ணீர் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை அளிப்பானாகவும் இந்துகுஷ் மலைத்தொடர் உள்ளது.