I2U2 அமைப்பின் ஆதரவில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளினால் தொடங்கப்பட்ட ஒரு உலகளாவிய அமைப்பில் இந்தியா இணைந்து உள்ளது.
இது பருவநிலைக்கேற்ற திறன்மிகு வேளாண்மை மற்றும் உணவு முறைப் புத்தாக்கம் ஆகியவற்றிற்கான முதலீட்டையும் ஆதரவையும் அதிகரிக்கச் செய்வதை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
I2U2 - இஸ்ரேல், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் - என்பது அபுதாபியில் நடத்தப்பட்ட ஒரு வணிக மன்றமாகும்.
பருவநிலைக்கான வேளாண்மை புத்தாக்கத் திட்டமானது (AIM4C) 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இரு நாடுகளால் தொடங்கப்பட்டதாகும்.
IM4C பருவநிலைக்கேற்ற திறன்மிகு வேளாண்மை மற்றும் உணவு முறைப் புத்தாக்கம் ஆகியவற்றிற்கான முதலீட்டையும் ஆதரவையும் அதிகரிக்கச் செய்வதை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இன்றுவரை, AIM4C முன்னெடுப்பானது இவற்றிற்கான முதலீடுகளை உலகளவில் 8 பில்லியன் டாலருக்கும் அதிகமான அளவில் வெற்றிகரமாக உயர்த்தியுள்ளது.