இந்தியாவில், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 'இயல்பானதை விட' அதிகமாக மழை பெய்யக் கூடிய வகையில் பருவமழை அமையும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையானது கணித்துள்ளது.
‘இயல்பான’ மழைப் பொழிவு எது என்பதற்கான வரையறையையும் இது அதிகாரப் பூர்வமாக மறுவரையறை செய்துள்ளது. அதை 89 செ.மீ இல் இருந்து 88 செ.மீ ஆக ஒரு செ.மீ அளவிற்கு இந்நிறுவனம் குறைத்துள்ளது.
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் மழைப் பொழிவானது நாட்டின் ஓராண்டில் பெய்யும் மழையின் 75% அளவை உள்ளடக்கும்.
இந்திய வானிலை ஆய்வுத் துறையானது இரண்டு கட்ட முன்னறிவிப்பை வெளியிடுகிறது. முதலில் ஏப்ரல் மாதத்தில் ஒரு முன்னறிவிப்பையும் பிறகு மே மாதத்தின் கடைசி வாரத்தில் இன்னும் விரிவான ஒரு முன்னறிவிப்பையும் வெளியிட்டு, பருவமழை எவ்வாறு நாடு முழுவதும் பரவுகிறது என்பதையும் இந்நிறுவனம் விளக்குகின்றது.
இந்திய வானிலை ஆய்வுத் துறையானது கணித ரீதியில் கடல் மற்றும் வளிமண்டலத்தை ஒத்த மாதிரியிலான இயற்பியலை அறிய மீத்திறன் கணினிகளை நம்பியுள்ளது.