அறிவியலாளர்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஊதா நிறப் பாசிகளின் பரிணாம வளர்ச்சியைக் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்புகள் ஆனது பரிணாமம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய முக்கியக் கருத்தாக்கத்திற்கு சவால் விடுக்கிறது.
சிறியதாக இருந்தாலும், இந்தப் பாசிகள் அவை வாழும் பனிப்பாறைகளில் வியத்தகு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
கோடைகாலத்தில் பனிப்பாறைகள் உருகும் பருவத்தில் பனிப்பாறைகளில் திரவ நீர் உருவாவதால், ஊதா நிறப் பாசிகளின் உருவாக்கம் ஆனது பனியின் மேற்பரப்பைக் கருமையாக்கி, அவை உருகும் வேகத்தைத் துரிதப்படுத்துகிறது.
சூரியத் திரை போல செயல்படும் பனிப்பாறையின் ஊதா நிறம் ஆனது, நிறமி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள புதிய மரபணுக்களால் உருவாக்கப்பட்டது.
பர்புரோகலின் எனப்படும் இந்த நிறமியானது, பாசி திசுக்களை புற ஊதா (UV) மற்றும் கட்புலனாகும் ஒளிகளின் சேதத்திலிருந்துப் பாதுகாக்கிறது.