சுற்றுலாத் துறை அமைச்சகம் ஆனது, பரியாதன் மித்ரா மற்றும் பர்யாதன் தீதி என்ற தேசியப் பொறுப்பு மிகு சுற்றுலா முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் சுற்றுப்பயண இடங்களில் தூதர்களாகவும் கதை சொல்லிகளாகவும் இருக்கும் ‘சுற்றுலாவிற்கு உகந்த’ நபர்களைச் சந்திப்பதன் மூலம், சுற்றுலாப் பயணிகளின் ஒட்டு மொத்த அனுபவத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சோதனை முறையில், சுற்றுலாப் பயணிகளுக்கு மிக நேர்மறையான அனுபவத்தை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து 6 இடங்களில் சுமார் 3,000 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.