TNPSC Thervupettagam
February 8 , 2023 529 days 275 0
  • பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் (79, ஓய்வு) சமீபத்தில் காலமானார்.
  • 1999 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான வன்முறையற்ற இராணுவப் புரட்சிக்குப் பிறகு பாகிஸ்தானின் பத்தாவது அதிபராக இவர் பொறுபேற்றார்.
  • அவர் 1998 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் 10வது ராணுவக் குழுமத்தின் தலைவராகவும், 1998 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை 7வது உயர்மட்டத் தலைவராகவும் பணியாற்றினார்.
  • ஸ்ரீநகரில் இருந்து லே பகுதியின் இணைப்புகளை துண்டிப்பதற்காக இந்தியாவுக்குள் நுழைய தனது வீரர்களுக்கு உத்தரவிட்டதன் வகையில் அவர் கார்கில் போரின் சிற்பி என்று அறியப்பட்டார்.
  • பர்வேஸ் முஷாரப் அதிபராக இருந்த போது தான் 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியா வந்தார்.
  • மருத்துவச் சிகிச்சைக்காக 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துபாய் சென்ற ஜெனரல் முஷாரப், பாகிஸ்தானுக்குத் திரும்பவில்லை.
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பாகிஸ்தானின் சிறப்பு நீதிமன்றம் ஆனது 2007 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் அரசியலமைப்பை இடைநிறுத்தியதற்காக ஜெனரல் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்தது.
  • முஷாரஃப் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தார்.
  • லாகூர் உயர் நீதிமன்றம் ஆனது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த மரணத் தண்டனையை ரத்து செய்து, முந்தைய விசாரணையினை அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பு வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்