TNPSC Thervupettagam

பறவை மொழி – யுனெஸ்கோ பட்டியல்

January 6 , 2018 2514 days 832 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார நிறுவனமானது துருக்கியில் அழியத்தகு தருவாயில் உள்ள கருங்கடல் (Black Sea) கிராமத்தினரின் “பறவைகள் மொழியினை“ அவசரகால பாதுகாப்பு தேவையுடைய உலக பாரம்பரியத்தின் அழியத்தகு நிலையிலுள்ளவையாக (Endangered part of world heritage in need of urgent protection) அறிவித்துள்ளது.
  • தொலைதூர மற்றும் மலைப்பாங்கான வடதுருக்கிப் பகுதிகளில் அப்பகுதியின் கிராம மக்களால் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தப்படும் அசாதாரண மற்றும் மிகவும் திறனுடைய இந்த விசில் மொழியானது அண்மையில் யுனெஸ்கோவின் தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரியப் பட்டியலில் (UNESCO list of Intangible Cultural Heritage) சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • துருக்கியின் கிரேசுன் மாகாணத்தின் கனாக்கி மாவட்டத்தி  னைச் சேர்ந்த சுமார் 10, 000 மக்கள் இன்றளவிலும் இந்த மொழியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
  • 500 ஆண்டுகளுக்கு முன்பு, துருக்கியின் ஓட்டாமான் பேரரசின் ஆட்சிக் காலத்தில் இந்த தகவல் தொடர்பு கொள்ளும் முறை உருவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்