சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முறை சார்ந்த மாநிலங்களுக்கு இடையேயான பறவை கணக்கெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட கங்கர் பள்ளத்தாக்கு பறவைகள் கணக்கெடுப்பின் போது சுமார் 200 பறவை இனங்கள் ஆவணப்படுத்தப்பட்டன.
சத்தீஸ்கர் மாநிலத்தினைச் சேர்ந்த பறவைகள் ஆர்வலர்கள் & சத்தீஸ்கரின் பறவைகள் மற்றும் வனவிலங்குகள் அமைப்பு மற்றும் இந்தியப் பறவைகள் கணக்கெடுப்பு அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கங்கர் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவின் வனத்துறையினால் இந்த கணக்கெடுப்பானது ஏற்பாடு செய்யப் பட்டது.
வனப் பணியாளர்கள், பறவை வழிகாட்டிகள் மற்றும் பறவைக் கண்காணிப்பாளர்களாக விளங்கும் இந்தியக் குடிமக்கள் ஆகியோரை உள்ளடக்கிய கங்கர் பள்ளத்தாக்குப் பூங்காவின் முதல் பறவை கணக்கெடுப்பு இதுவாகும்.