TNPSC Thervupettagam

பறவைக் காய்ச்சலால் துருவக் கரடி மரணம்

January 13 , 2024 317 days 247 0
  • அலாஸ்கா நாட்டில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு துருவக் கரடி உயிரிழந்துள்ளது.
  • துருவக் கரடியானது, மிகவும் தொற்று மிக்க பறவைக் காய்ச்சலால் (HPAI) உயிரிழந்து உள்ளது.
  • H5N1 என்ற கொடிய தொற்றினால் பாதிக்கப்பட்டப் பறவைகளின் சடலங்களுடன் அவை தொடர்பு கொண்டதன் மூலம் இத்தொற்று ஏற்பட்டது.
  • கருப்பு மற்றும் பழுப்பு நிறக் கரடிகள் முன்னதாகவே இந்தக் கொடிய வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளன.
  • H5N1 முதன்முதலில் 1996 ஆம் ஆண்டில் சீனாவில் கண்டறியப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டில் எதிர்பாராத எண்ணிக்கையிலான பறவைகளைக் கொன்ற இந்தக் கொடிய வைரஸின் புதிய மாற்றுரு தோன்றியது.
  • பல பாலூட்டி இனங்களைப் பாதித்து, மிகவும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை இந்த வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்