இந்தியாவின் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வியாபாரிகளுக்கும் நுகர்வோர்களுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சுலபமாக்கிட தனது பல தரப்பு பண வழங்கீடு ஏற்பு கருவியை (Multi Option Payment Acceptance Device - MOPAD) வெளியிட்டு இருக்கின்றது.
இது ஒரே நேரத்தில் வியாபாரிகளுக்கு வர்த்தகம் செய்தலை எளிதாக்கிடவும் நுகர்வோர்களுக்கு டிஜிட்டல் வசதியை ஏற்படுத்திடவும் எண்ணுகின்றது.
இது வாடிக்கையாளர்களை அட்டைகள், பாரத் QR Code, UPI மற்றும் SBI Buddy (மின்னணு பணப்பை) போன்றவை மூலமாக ஒற்றை விற்பனைப் பகுதி முனையத்தின் மீது பணம் செலுத்துதலை ஏற்படுத்திட இயலச் செய்யும்.
இது வியாபாரிகளுக்கு பல தரப்புகளிலிருந்து வரும் பரிவர்த்தனைகளை முறைப்படுத்திட உதவிடும் வகையில் பலதரப்பு இயந்திரங்களை நீக்கிவிடும்.