TNPSC Thervupettagam

பல வகையான ஆபத்துகளுக்கான முன்னெச்சரிக்கை அமைப்புகளின் உலகளாவிய நிலை — இலக்கு G

October 20 , 2022 638 days 418 0
  • ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகம் மற்றும் உலக வானிலை அமைப்பு ஆகியவை இணைந்து இந்த அறிக்கையினை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின் சில தகவல்களானது,  செண்டாய் கட்டமைப்புக் கண்காணிப்பு அமைப்பின் தரவு மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • செண்டாய் கட்டமைப்பு அமைப்பின் இலக்கு G ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் பல வகையான ஆபத்துகளுக்கான முன்னெச்சரிக்கை அமைப்புகள் (MHEWS) மற்றும் பேரிடர் ஆபத்து தகவல் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றின் கிடைக்கும் தன்மை மற்றும் அணுகல் ஆகியவற்றை அதிகரிக்க முயல்கிறது.
  • உலகில் உள்ள 50 சதவீத நாடுகளில் இயற்கைப் பேரிடர்களுக்கு எதிரான முன்னெச்சரிக்கை அமைப்புகள் இல்லை.
  • ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அரபு மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் பல வகையான ஆபத்துகளுக்கான முன்னெச்சரிக்கை அமைப்புகள் மிகக் குறைந்த அளவு பரப்பளவில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
  • சராசரியாக, ஒவ்வொரு பிராந்தியத்திலும் குறைந்தபட்சம் 40% நாடுகள் பல வகையான ஆபத்துகளுக்கான முன்னெச்சரிக்கை அமைப்புகளைப் பயன்படுத்தச் செய்வதாகப் பதிவு செய்துள்ளன.
  • குறைந்த அளவு வளர்ந்த நாடுகளில் (LDC) பாதிக்கும் குறைவானவை மற்றும் சிறிய வளர்ந்து வரும் தீவு நாடுகளில் 33 சதவீதம் மட்டுமே பல வகையான ஆபத்துகளுக்கான முன்னெச்சரிக்கை அமைப்புகளைக் கொண்டுள்ளன.
  • முன்னெச்சரிக்கை வழங்கீட்டு அமைப்புகளின் குறைந்த அளவுப் பயன்பாடு உள்ள நாடுகளில் பதிவான இறப்பு எண்ணிக்கையானது, அவற்றின் கணிசமான மற்றும் விரிவானப் பாதுகாப்பு கொண்ட நாடுகளில் பதிவான அளவை விட எட்டு மடங்கு அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்