TNPSC Thervupettagam

பலபடி விரிசல் தொழில்நுட்பம்

January 30 , 2020 1635 days 676 0
  • கிழக்கு கடற்கரை ரயில்வேயானது கழிவிலிருந்து ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான இந்திய ரயில்வேத் துறையின் முதலாவது ஆலையைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவில் இது போன்று அமைந்துள்ள நான்காவது ஆலை இதுவாகும்.
  • இந்த ஆலையானது பலபடி விரிசல் தொழில்நுட்பத்துடன் ரூ. 1.79 கோடி செலவில் அமைக்கப் பட்டுள்ளது.
  • பலபடி விரிசல் தொழில்நுட்பத்தில், கழிவுகள் 24 மணி நேரத்தில் பதப்படுத்தப் பட்டு சீர்திருத்தப் படுகின்றன.
  • இந்தத் தொழில்நுட்பமானது பலபடி நீக்கம், விரிசல், சீர்திருத்தம், தேய்த்துத் தூய்மைப் படுத்துதல், துகள் வடிகட்டுதல் மற்றும் விரைவாக தணித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.
  • இந்த முறையில் முன்கூட்டியே பிரித்தெடுத்தலானது தேவையில்லை என்பது இந்த முறையின் முக்கியப் பயன்பாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்