ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (United Nations Development Programme - UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாட்டு முன்னெடுப்பு ஆகியவை இணைந்து வருடாந்திர உலக பலபரிமாண வறுமைக் குறியீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வறுமையானது 3 பரிமாணங்கள் மற்றும் 10 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தனிநபர் நிலையில் கணக்கிடப்படுகின்றது.
ஒருவர் கொடுக்கப்பட்ட காரணிகளில் குறைந்தபட்சம் ஏதாவது ஒன்றில் குறைபாடு உடையவராகக் காணப்பட்டாலும் அவர் வறுமை நிலையில் உள்ளவராகக் கருதப்படுவார்.
இந்த அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிக வேகமாக தனது வறுமை நிலையை 55 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. 2005-06 மற்றும் 2015-16 இடைப்பட்ட காலகட்டத்தில் 271 மில்லியன் மக்கள் வறுமை நிலையிலிருந்து விலகியுள்ளனர்.
இந்தியாவில் பாதிக்கு மேல் வறுமை நிலையில் உள்ள மக்கள் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளனர்.
உலகெங்கிலும் பலபரிமாண வறுமை நிலையில் உள்ள மக்களில் 33 சதவிகிதம் நபர்கள் துணை சஹாரா மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் உள்ளனர்.