ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதன்முறையாக, பலமு புலிகள் சரணாலயத்திலிருந்து (PTR) வெளியேறிய புலி ஆனது அதன் சொந்தப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு அந்தப் புலி ஆனது இங்கிருந்து வெளியேறி, ஜார்க்கண்டில் உள்ள டால்மா வனவிலங்கு சரணாலயத்திலும் மேற்கு வங்காளத்தின் புருலியாவிலும் அலைந்து திரிந்தது.
இறுதியாக டால்மா வனவிலங்கு சரணாலயத்தில் வசித்து வந்த அப்புலி, உணவின்றி, அறிமுகமில்லாத காட்டில் வசிக்கப் போராடியது.
ஜாம்ஷெட்பூரில் அமைந்துள்ள டால்மா வனவிலங்கு சரணாலயம் (தங்குமிடம்) ஆனது யானைகளின் வாழ்விடத்திற்குப் பிரபலமானதாகும்.
பலமு புலிகள் சரணாலயம் ஆனது, கால்தட எண்ணிக்கையின் அடிப்படையில் புலிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட உலகின் முதல் சரணாலயமாகும்.