பலாவு – சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்துப் பாதுகாப்பு அளிக்கும் பொருள்களுக்குத் தடை
January 5 , 2020 1789 days 615 0
பசிபிக் தீவில் உள்ள ஒரு நாடான பலாவு நாடானது பவளப் பாறைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்துப் பாதுகாப்பு அளிக்கும் பொருள்களுக்குத் தடை விதித்த முதலாவது நாடாக உருவெடுத்துள்ளது.
பவளப் பாறைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆக்ஸிபென்சோன், எத்தில் பாராபென், ஆக்டினாக்ஸேட், பியூட்டில் பாராபென் போன்ற 10 பொருட்களை அந்நாடு தடை செய்துள்ளது. இந்தப் பொருட்கள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப் படுகின்றன.
சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்துப் பாதுகாப்பு அளிக்கும் பொருள்கள் புற ஊதாக் கதிர்வீச்சை உறிஞ்சி, அவை பவளப் பாறைகளை நிறம் இழக்கச் செய்யும் திறன் கொண்டவையாகும்.
பலாவு நாட்டைப் பற்றி
பலாவுவில் உள்ள ராக் தீவுகள் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாக விளங்குகின்றன.
பிஜிக்குப் பிறகு பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட இரண்டாவது நாடு பலாவு நாடாகும்.