TNPSC Thervupettagam

பலிதான் முத்திரை

June 8 , 2019 1870 days 628 0
  • சர்வதேசக் கிரிக்கெட் குழு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் MS தோனியின் விக்கெட் கையுறைகளிலிருந்து இராணுவ முத்திரையை நீக்கிட கேட்டுக் கொண்டிருக்கின்றது.
  • முன்னாள் இந்திய அணித் தலைவரான MS தோனி இந்திய துணை ராணுவ சிறப்புப் படைகளின் பலிதான் முத்திரையுடன் கூடிய விக்கெட் கையுறைகளை அணிந்தவராகக் காணப்பட்டார்.
  • இது இங்கிலாந்தின் சவுதாம்ப்டனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் துவக்க ஆட்டத்தின் போது நிகழ்த்தப்பட்டது.
  • பலிதான் முத்திரை என்பது போர்க்கள குத்துவாள் ஒன்றைக் கீழ்நோக்கிய நிலையில் கொண்டிருக்கும். மேலும் கத்தியின் பக்கவாட்டிலிருந்து மேல் நோக்கிய நிலையில் இரு இறக்கைகளும், அதன் குறுக்கு வெட்டில் பலிதான் என்ற வார்த்தையும் பொறிக்கப்பட்டு இருக்கும்.
  • பலிதான் என்பதற்கு தியாகம் எனப் பொருள்
  • தோனி தரைப்படை ராணுவத்தின் பாராசூட் பிரிவில் (வான்குடை மிதவைப் பிரிவு) ஒரு கௌரவ லெப்டினன்ட் கர்னல் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்