TNPSC Thervupettagam

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரின் பங்கு

December 7 , 2023 227 days 121 0
  • சமீபத்தில், இந்திய தலைமை நீதிபதி D.Y. சந்திரசூட் அவர்கள் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வானது, வேந்தராக செயல்படும் ஆளுநர், அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கட்டுப்படமாட்டார் என்றும், அவரது தனிப்பட்ட திறனின் அடிப்படையில் மட்டுமே செயல்படுவார் என்றும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.
  • கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தினைப் பின்னணியாகக் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • மாநிலச் சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட பெரும்பாலான மாநில அரசுப் பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஒரு வேந்தராக செயல்படும் போது கொண்டுள்ள அதிகாரங்கள் ஆனது, மாநில ஆளுநராக செயல்படும் போது கொண்டுள்ள அதிகாரங்கள் மற்றும் கடமைகளைச் செயல்படுத்துவதில் எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை.
  • 2022 ஆம் ஆண்டில், மேற்கு வங்காள மாநில அரசானது ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரை வேந்தராக நியமிக்க முயன்றது, அதே நேரத்தில் தமிழ்நாடு அரசானது துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசாங்கத்திற்கு மாற்ற முயன்றது.
  • 1981 ஆம் ஆண்டு ஹர்த்வாரி லால், ரோஹ்தக் தரப்பினருக்கு எதிரான G.D. தபசே வழக்கின் (சண்டிகர்) தீர்ப்பில், “ஆளுநர் பல்கலைக்கழகத்தின் பதவி வழி வேந்தராவார். மேலும் அவரது பதவியின் அடிப்படையில் அவர் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டிய கட்டாயம் இல்லை” என்று உயர்நீதிமன்றம் கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்