TNPSC Thervupettagam

பல்பரிமாண வறுமை பற்றிய நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கை

January 18 , 2024 316 days 348 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, "2005-06 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்த பல் பரிமாண வறுமை" என்ற தலைப்பில் ஒரு விவாதக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.
  • 2013-14 ஆம் ஆண்டில் 29.17% ஆக இருந்த இந்தியாவில் பல் பரிமாண வறுமையானது, 2022-23 ஆம் ஆண்டில் 11.28% ஆகக் குறைந்துள்ளது.
  • கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் மொத்தம் 24.82 கோடி தனிநபர்கள் பல்பரிமாண வறுமை நிலையிலிருந்து விடுபட்டுள்ளனர்.
  • கடந்த ஒன்பது ஆண்டுகளில் 5.94 கோடி மக்கள் பல் பரிமாண வறுமைநிலையிலிருந்து விடுபட்டதுடன், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏழை மக்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவு பதிவாகியுள்ளது.
  • அதைத் தொடர்ந்து பீகார் 3.77 கோடி, மத்தியப் பிரதேசம் 2.30 கோடி மற்றும் ராஜஸ்தான் 1.87 கோடி ஆகியவற்றை பதிவு செய்துள்ளன.
  • அடுக்குக்குறி சார்பு முறையைப் பயன்படுத்திக் கணக்கிடப்பட்ட வறுமை விகிதம் ஆனது 2005-06 முதல் 2015-16 ஆம் ஆண்டு வரையிலான (7.69%) காலக் கட்டத்துடன் ஒப்பிடும் போது, 2015-16 முதல் 2019-21 வரையிலான காலக் கட்டத்தில் (10.66% வருடாந்திர வீழ்ச்சி விகிதம்) அது குறையும் வேகம் மிக விரைவாக இருந்தது.
  • பல்பரிமாண வறுமை என்பது சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் பதிவாகும் முன்னேற்றத்தின் அடிப்படையில் அளவிடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்