TNPSC Thervupettagam

பல்லுயிர் சூழல் பாரம்பரிய மண்டலங்கள்

January 9 , 2021 1290 days 881 0
  • சுற்றுச்சூழல் ரீதியாக பாதிக்கப்படும் மூன்று பகுதிகளை தமிழ்நாடு மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது.
  • அவையாவன
    • மதுரையில் அரிட்டாபட்டி,
    • திருநெல்வேலியில் வாகைகுளம் மற்றும்
    • கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆகியனவாகும்.
  • விரைவில் இவை பல்லுயிர் சூழல் மண்டலங்களாக அறிவிக்கப்படும்.

அரிட்டாபட்டியைப் பற்றி

  • பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டு (பொது ஆண்டிற்கு முன்) காலத்து தமிழ் பிராமி கல்வெட்டுகள் அரிட்டாபட்டியில் அமைந்துள்ள கழிஞ்சமலையில் காணப் படுகின்றன.
  • அரிட்டாபட்டியில் கிடைத்த ஒரு கல்வெட்டு இதற்கு முன்னர் இக்கிராமத்தை ‘பாதிரிக்குடி’ என்று அழைத்ததைக் குறிக்கிறது.
  • நெல்வேலி சிழியன் மற்றும் இலஞ்சி இமயவன் ஆகிய இருவரும் இந்தக் குகையில் சமணத் துறவிகளுக்குத் தங்குமிடம் அளித்ததாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன
  • பாண்டிய ஆட்சிக் காலத்தில், அரிட்டாப்பட்டி கிராமம் ‘தென்பரப்பு  நாட்டின்’ ஒரு பகுதியாக இருந்தது.             
  • இந்தக் குகைக்கு அருகில், ஒரு பழங்கால சமண தீர்த்தங்கரரின் சிற்பம் காணப் படுகிறது.
  • இந்தச் சிற்பத்தின் கீழ் காணப்படும் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று கழிஞ்சமலையானது முன்பு 'திருப்பிணையான் மலை' என்று அழைக்கப் பட்டதாகக் கூறுகிறது.
  • இந்தக் கிராமத்தின் மற்றுமொரு முக்கியமான பாரம்பரிய இடம் இலகுலீசர் என்ற ஒரு அரிய சிற்பத்துடன் கூடிய 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு குடைவரை சிவன் கோயிலாகும்.
  • சதயவர்மன் விக்ரம பாண்டியன் காலத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு மற்றொரு சிவன் கோவிலில் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்