ஐக்கிய நாடுகள் அமைப்பானது 2010 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய 20 உலகளாவியத் திட்டங்களை வகுத்துள்ளது.
இது பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கான உத்திசார் திட்டம் என்றழைக்கப் படுகின்றது.
2020 ஆம் ஆண்டானது பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கான சிறந்த ஆண்டாகும்.
மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகமானது பல்லுயிர்ப் பாதுகாப்பு குறித்த 5 முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளது.
சம்ரக்சன் பல்லுயிர் பெருக்கத்திற்கான உள்ளகப் பயிற்சித் திட்டம் - இது முதுகலைத் திட்டத்தில் 20 மாணவர்களை 1 ஆண்டுக் காலத்திற்கு ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் பிரச்சாரமான அருகி வரும் உயிரினங்களின் சட்ட விரோதக் கடத்தல்.
வனவிலங்கு மீதான குற்றத் தடுப்பு அமைப்பின் பிரச்சாரமான “அனைத்து உயிரினங்களும் விருப்பத்தின் அடிப்படையில் இடம்பெயர்வதில்லை”.
பங்காளர் நாடுகளின் உலக வனவிலங்கு நிதிய மாதிரிக் கருத்தரங்கு.
பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் உயிரியல் பன்முகத் தன்மைச் சட்டம், 2002 என்ற சட்டம் குறித்த இணையவழிக் கருத்தரங்குத் தொடர்கள்.