சர்வதேச அறிவியல் அமைப்பான “பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் மீதான அரசாங்கங்களுக்கிடையேயான அறிவியல் – கொள்கை தளம்” (IBPES - Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services) என்ற நிறுவனமானது உலகின் சூழலியல் அழிவு மீதான ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது மனித நடவடிக்கையானது தற்பொழுதுள்ள மில்லியனுக்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கு இனங்களை அச்சுறுத்துகின்றது என்று கூறுகின்றது.
புவியின் நிலப் பரப்பில் 75 சதவிகிதமும் கடல்சார் பரப்பில் 66 சதவிகிதமும் “குறிப்பிடத்தக்க வகையில்” மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் 85 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஈர நிலங்கள் தொலைக்கப்பட்டுள்ளன.
IBPES என்பது 2012 ஆம் ஆண்டில் ஐ.நா. உறுப்பு நாடுகளினால் உருவாக்கப்பட்ட அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு தனிச் சுதந்திர அமைப்பாகும்.
இதன் தலைமையகம் ஜெர்மனியில் உள்ள பான் நகரில் அமைந்துள்ளது.
IBPES-ன் குறிக்கோள்கள் பின்வருமாறு
பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அறிவியல்சார் கொள்கை இடைமுகத்தை வலுப்படுத்தல்.