TNPSC Thervupettagam

பல்லுயிர்ப் பெருக்க அறிக்கை

May 9 , 2019 1899 days 674 0
  • சர்வதேச அறிவியல் அமைப்பான “பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் மீதான அரசாங்கங்களுக்கிடையேயான அறிவியல் – கொள்கை தளம்” (IBPES - Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services) என்ற நிறுவனமானது உலகின் சூழலியல் அழிவு மீதான ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது மனித நடவடிக்கையானது தற்பொழுதுள்ள மில்லியனுக்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கு இனங்களை அச்சுறுத்துகின்றது என்று கூறுகின்றது.
  • புவியின் நிலப் பரப்பில் 75 சதவிகிதமும் கடல்சார் பரப்பில் 66 சதவிகிதமும் “குறிப்பிடத்தக்க வகையில்” மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் 85 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஈர நிலங்கள் தொலைக்கப்பட்டுள்ளன.
  • IBPES என்பது 2012 ஆம் ஆண்டில் ஐ.நா. உறுப்பு நாடுகளினால் உருவாக்கப்பட்ட அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு தனிச் சுதந்திர அமைப்பாகும்.
  • இதன் தலைமையகம் ஜெர்மனியில் உள்ள பான் நகரில் அமைந்துள்ளது.
  • IBPES-ன் குறிக்கோள்கள் பின்வருமாறு
    • பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அறிவியல்சார் கொள்கை இடைமுகத்தை வலுப்படுத்தல்.
    • பல்லுயிர்ப் பெருக்கத்தின் நீடித்த பயன்பாடு
    • நீண்ட கால மனித நலம்
    • நீடித்த வளர்ச்சி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்