TNPSC Thervupettagam

பல்வேறு தலைவர்களின் சிலைகள்

June 27 , 2024 4 days 133 0
  • தமிழகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் சிலைகள் நிறுவப் பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • சென்னையில் காந்தி மண்டபம் வளாகத்தில் இராணி வேலு நாச்சியார் அவர்களின் சிலை நிறுவப் பட உள்ளது.
  • முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, சிந்து சமவெளி நாகரிகத்தின் ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ தளங்களின் அகழ்வாராய்ச்சியில் ஒரு முக்கியச் செயற் கருவியாக விளங்கிய தொல்பொருள் ஆய்வாளர் சர். ஜான் ஹூபர்ட் மார்ஷல் ஆகியோரின் சிலைகள் 50 லட்சம் ரூபாய் செலவில் சென்னையில் நிறுவப்பட உள்ளன.
  • சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்களுக்கென சிலைகள் அமைக்கப்படும்.
  • 1713 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு (தரங்கம்பாடி) அச்சகத்தினை அறிமுகம் செய்து, ‘புனித தேவ ஆகமத்தின்’ (புதிய ஏற்பாடு) தமிழ் மொழிபெயர்ப்பினை அச்சிட்ட பார்தலோமியூ சீகன்பால்க் அவர்களின் சிலையும் நிறுவப்பட உள்ளது.
  • தமிழகத்தில் கோயம்புத்தூரில் G.D. நாயுடு அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் செலவில் சிலை நிறுவப்பட்டு அவரது பெயரில் ஒரு கலையரங்கம் கட்டப்படும்.
  • முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் சிலை நிறுவப்படும்.
  • சுதந்திரப் போராட்ட வீரர் வை. நாடிமுத்துப்பிள்ளை அவர்களுக்குத் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சிலை நிறுவப்படும்.
  • காவிரி மீட்புக் குழுவில் விவசாயிகளின் உரிமைக்காகப் போராடியவரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான C. முத்துசாமி அவர்களுக்கு கரூரில் சிலை நிறுவப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்